பலத்த காற்று : 26 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

25 மாசி 2025 செவ்வாய் 10:45 | பார்வைகள் : 420
பலத்த புயல் காற்று காரணமாக நாட்டின் 26 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 25, இன்று செவ்வாய்க்கிழமை நண்பகலின் பின்னர் இந்த புயல் காற்று பதிவாகும் எனவும், குறைந்தபட்சம் 60 கி.மீ தொடக்கம் அதிகபட்சமாக 80 கி.மீ வேகம் வரை வேகமான காற்று வீசும் எனவும் வானிலை அவதானிப்பு மையமான Meteo France அறிவித்துள்ளது.
Allier, Charente, Charente-Maritime, Cher, Côtes-d'Armor, Côte-d'Or, Creuse, Doubs, Finistère, Gironde, Ille-et-Vilaine, Indre, Indre-et-Loire, Loir-et-Cher, Loire-Atlantique, Loiret, Maine-et-Loire, Mayenne, Morbihan, Nièvre, Puy-de-Dôme, Saône-et-Loire, Sarthe, Deux-Sèvres, Vendée, Vienne, Haute-Vienne, Yonne மற்றும் Jura ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.