Paristamil Navigation Paristamil advert login

பணிசெய்யாமல் வருமானத்தை ஈட்டிய ஜோர்தன் பாதெல்லா!!

பணிசெய்யாமல் வருமானத்தை ஈட்டிய ஜோர்தன் பாதெல்லா!!

25 மாசி 2025 செவ்வாய் 12:04 | பார்வைகள் : 1434


Rassemblement National (RN) கட்சித்தலைவரான ஜோர்தன் பாதெல்லா, இல் து பிரான்ஸ் மாகாண பிராந்திய கவுன்சிலர் (mandat de conseiller régional d'Île-de-France) பதவியில் இருந்து விலகியுள்ளார்.


கெளரவ பதவியான அவர், கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து அப்பதவியில் இருந்து வருகிறார். இதற்காக மாதம் 2,999.84 யூரோக்கள் ஊதியமாக மாகாணசபையிடம் இருந்து பெற்று வந்திருந்தார். ஆனால் அவர் குறித்த பதவிக்காலத்தின் போது சரியாக கடமையாற்றவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மாகாணசபை கவுன்சில் கூட்டத்துக்கு அவர் வருகை தருவது மிக குறைவு எனவும், 73% சதவீதமான சமூகமளிக்காமை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர் பெப்ரவரி 19 ஆம் திகதி தனது பதவியை விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அவரது கட்சியைச் சேர்ந்த Colette Lévêque அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்