வத்திக்கானின் சென்பீட்டர்ஸ் சதுக்கத்தில் பாப்பரசருக்காக மக்கள் பிரார்த்தனை

25 மாசி 2025 செவ்வாய் 15:45 | பார்வைகள் : 324
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரிசுத்த பாப்பரசர் குணமடையவேண்டும் என வத்திக்கானின் சென்பீட்டர்ஸ் சதுக்கத்தில் கடும் குளிரின் மத்தியிலும்நூற்றுக்கணக்கானவர்கள் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
சென்பீட்டர்ஸ் சதுக்கத்தில் பிரார்த்தனைகளில் ஈடுபட்டவர்கள் பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலைகுறித்து கவலை வெளியிட்டதுடன் அவர் விரைவில் குணமடைவார் என நம்பிக்கையும் வெளியிட்டனர்.
கத்தோலிக்க திருச்சபையை புதிய பாதையில் செலுத்தும் அவரது முயற்சிகளிற்காக அந்த மக்கள் நன்றி தெரிவித்தனர்.
மழைநாளில் கடும் குளிரின் மத்தியில் இடம்பெற்ற இந்த பிரார்த்தனைகளிற்கு வத்திக்கானின்; தலைமை தாங்கினார்.
வத்திக்கான் பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை குறித்து முன்னைய நாட்களை விட நம்பிக்கை அளிக்ககூடிய செய்தியை வெளியிட்ட போதிலும்,இருப்பினும் சென்பீட்டர்ஸ் சதுக்கத்தில் காணப்பட்டவர்களின் மனோநிலை பெரும்பாலும் சோகமானதாகவே காணப்பட்டது.அங்கு காணப்பட்ட 4000க்கும் அதிகமானவர்கள் தாங்கள் பாப்பரசரின் இறுதிநாட்களிற்காகவே ரோமிற்கு செல்லவேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தனர்.
பாப்பரசர் துன்புறுவதை பார்ப்பது மனவேதனையை ஏற்படுத்துகின்றது என கர்தினால் பியட்டிரோ பரோலின் தெரிவித்தார்.அதேவேளை கிறிஸ்தவ திருச்சபைக்கு அவர் ஆற்றிய பணிகளிற்காக நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டார்.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்கற்றுக்கொடுத்த விடயங்களிற்கு நன்றிதெரிவிப்பதற்காக அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விடயங்களிற்கு நன்றி தெரிவிப்பதற்காக தங்கள் சமூகத்தினர்அங்குவந்துள்ளனா என மெக்சிக்கோவை சேர்ந்த என மெக்சிக்கோவை சேர்ந்த மதகுரு ஒருவர் தெரிவித்தார்.
பலமொழிகளை பேசுபவர்கள் அங்கு திரண்டிருப்பது கத்தோலிக்க திருச்சபைக்கு பெரும் ஆறுதல் என கர்தினால் அஞ்சலோ பக்னாசோ தெரிவித்தார்.
ஆராதனை ஆரம்பமாவதற்கு முன்னர் குடைகளுடன் வந்த சிக்காக்கோவை சேர்ந்த கத்தோலிக்க சுற்றுலாப்பயணிகள் சென்பீட்டர்சில் நாளாந்த ஆராதனைகளில் பாப்பரசருக்காக பிரார்த்தனை செய்ததாக தெரிவித்ததுடன் மீண்டும் வருவதற்கு தீர்மானித்ததாக குறிப்பிட்டனர்.
பாப்பரசரின் பிரான்சிஸின் இறுதி நாட்களிற்காக ரோமில் இருப்போம் என்பது ஏனைய பலரை போல தங்களுக்கும் தாங்கமுடியாத விடயமாக காணப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
நாள்; நேரம் குறித்து எவருக்கும் எதுவும் தெரியாது எனினும் இது வரலாற்றுதருணம் என எட்வேர்ட் பேர்ஜெக் என்பவர் தெரிவித்தார்.
பெருவை சேர்ந்த ஹட்சுமி வில்லானுவேவாவும் அதே உணர்வை வெளிப்படுத்தினார்.பரிசுத்த பாப்பரசர் ஜோன் போலை தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்த அவர் ஆனால் பிரான்சிஸ் இலத்தீன் அமெரிக்க பாப்பரசர் என்பதால் நெருக்கமாக உணர்ந்ததாக தெரிவித்தார்.
நாங்கள் பாப்பரசருக்காக பிரார்த்தனை செய்யவந்தேன் அவர் விரைவில் குணமடைவார்,அவர் சமாதானத்தின் செய்தியை பகிர்ந்துகொள்ளும் பெரும் பணியில் ஈடுபட்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.
குடியேற்றவாசிகள் குறித்து பாப்பரசர் வெளிப்படுத்திய கருணையை அவர் பாராட்டினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாப்பரசருக்காகதாங்கள் பிரார்த்திப்பதாக கத்தோலிக்கர்கள் அல்லாதவர்களும் தெரிவித்தனர்.