கனடா மீது 25 சதவிகித வரிவிதிப்பு- உறுதி செய்தார் ட்ரம்ப்

25 மாசி 2025 செவ்வாய் 16:39 | பார்வைகள் : 204
கனடா மற்றும் மெக்சிகோ மீது, திட்டமிட்டபடி வரி விதிப்புகள் அடுத்த மாதம் துவங்கும் என்பதை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.
கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரிகள் விதிக்க இருப்பதாக அறிவித்திருந்தார் ட்ரம்ப்.
பின்னர், அதை ஒரு மாதத்திற்கு தள்ளிவைப்பதாக அறிவித்திருந்தார் ட்ரம்ப். அவர் விதித்த காலக்கெடு மார்ச் மாதம் 4ஆம் திகதி முடிவடைகிறது.
இந்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி கனடா மற்றும் மெக்சிகோ மீது, வரி விதிப்புகள் அடுத்த மாதம் துவங்கும் என்பதை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.