Paristamil Navigation Paristamil advert login

SAMU சேவைகள்! - சில தகவல்கள்!!

SAMU சேவைகள்! - சில தகவல்கள்!!

5 புரட்டாசி 2017 செவ்வாய் 18:30 | பார்வைகள் : 17889


நோயாளர் காவு வண்டி. நம் எல்லோருமே அறிந்தது தான். எங்கு ஒரு விபத்தோ.. அவசர அழைப்போ... "டான்" என சம்பவ இடத்துக்கு வந்து சேரும் இந்த SAMU பற்றி தெரியாத தகவல்கள் சில உங்களுக்காக...!!
 
SAMU என்றால் Service d'Aide Médicale Urgente என்பது விரிவாக்கம். அவசர மருத்துவ சேவைகள் என அர்த்தம். 
 
அரச நிதியில் இயங்கும் இந்த SAMU சேவைகள் முற்றிலும் இலவசம். 1986 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவைகள் முழுக்க முழுக்க மருத்துவத்தேவைகளுக்காக இயங்குகிறது. 
 
இது வெறுமனே காவு வண்டி மட்டும் இல்லை. உள்ளே ஒரு 'குட்டி' மருத்துவமனையே உள்ளது. அவசர முதல் உதவிகள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது இந்த SAMU வாகனம். தவிர தொலைபேசியில் சில முதலுதவி சிகிச்சைகளை அறிவுறுத்தவும், தொலைபேசி வழியாகவே சில மருத்துவ ஆலோசனைகளை வழங்கவும் செய்கின்றனர் இவர்கள். 
 
தொலைபேசியில் வரும் அவசர அழைப்புக்களில் 65 வீதமானவர்களுக்குத் தான் உண்மையிலேயே நோயாளர் காவு வண்டி தேவைப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது. மீதமானவர்களுக்கு தொலைபேசியினூடாகவே அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. 
 
தவிர தற்போதைய SAMU சேவைகள் 10 நிமிடங்களுக்குள்ளாக நோயாளர்களை வந்தடைவதாகவும் குறிப்பிடுகிறார்கள். 
 
SAMU சேவைகள் முற்றிலும் இலவசம் என்றாலும், தவறாக பயன்படுத்தினால் கடுமையான தண்டனையும் குற்றப்பணமும் உண்டு. 15 எனும் இலக்கத்தை அழுத்தினால்.. அடுத்த 10 நிமிடங்களுக்குள் உங்கள் இருப்பிடம் தேடி வரும் இந்த உயிர்காக்கும் நண்பன்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்