Val-de-Marne : பாரிய தீ விபத்து.. பெரும் ஆபத்து தவிர்ப்பு!!

25 மாசி 2025 செவ்வாய் 17:21 | பார்வைகள் : 3433
Ivry-sur-Seine (Val-de-Marne) நகரில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்று தீவிபத்துக்குள்ளானது.
இன்று பெப்ரவரி 25 ஆம் திகதி காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள Auguste-Delaune எனும் அருங்காட்சியகத்தின் திடீரென தீ பரவியது. 1953 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான அக்கட்டிடம் தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனடியாக தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அதிஷ்ட்டவசமாக கட்டிடத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு காப்பாற்றப்பட்டனர்.
70 தீயணைப்பு படையினர் இணைந்து இந்த மீட்புப்பணியை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.
உயிராபத்துக்கள் எதுவும் இல்லை என்றபோதும், கட்டிடமும் அதிலிருந்த பொருட்களும் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.