இரண்டு மாதங்களின் பின்னர் பரிசில் உள்ள ஏழு சூதாட்ட விடுதிகள் திறப்பு!!

26 மாசி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 1046
கட்டாயத்தின் பேரில் மூடப்பட்டிருந்த ஏழு சூதாட்ட விடுதிகள், இரண்டு மாதங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
பரிசில் உள்ள சூதாட்ட விடுதிகள் கடந்த ஜனவரி 1 ஆம் திகதி (2025) மூடப்பட்டிருந்தன. 2008 ஆம் ஆண்டு ஐரோப்பிய பாரளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட 'சட்டமன்ற கட்டமைப்புச் சட்டம்' (ஆங்கிலத்தில் : New Legislative Framework) சட்டத்தின் மூலம் இந்த விடுதிகள் மூடுவதற்கு பணிக்கப்பட்டிருந்தது. வருமானத்தை சரியாக கணக்கு காண்பிக்கவில்லை உள்ளிட்ட நிர்வாக முறைகேடுகளைக் கண்காணிக்க இந்த சட்டம் உதவுகிறது.
இந்நிலையில், இரு வாரங்களின் பின்னர் வரும் வாரங்களின் பின்னர் மார்ச் 1 ஆம் திகதி அவை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை வர்த்தமானி வெளியிட்டுள்ளது.
இந்த சூதாட்ட விடுதிகள் மூடப்பட்டிருந்ததை அடுத்து, 1,500 பேர் வரை பகுதிநேர வேலை வாய்ப்பை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.