குடியேற்றம் தொடர்பில் இன்று அவசர சந்திப்பு!!

26 மாசி 2025 புதன் 08:43 | பார்வைகள் : 1312
சட்டவிரோதமாக அகதிகள் நாட்டுக்குள் நுழைவதை தடுப்பது தொடர்பில் இன்று பெப்ரவரி 26, புதன்கிழமை அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது.
Mulhouse நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த அவசர சந்திப்பு இடம்பெற உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்த குறித்த தாக்குதலை மேற்கொண்டிருந்தது அல்ஜீரியாவைச் சேர்ந்த பயங்கரவாதி எனவும், அவர் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் நாட்டை விட்டு வெளியேறப் பணிக்கப்பட்டவர் எனவும், ஆனால் அதன் பின்னரே ஒருவர் உயிரிழக்க காரணமாக அமைந்த பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதை அடுத்தே, சட்டங்களை கடுமையாக இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.