மரணச்சடங்குக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் மரணம்
26 மாசி 2025 புதன் 09:30 | பார்வைகள் : 11237
மரணச்சடங்குக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின தந்தையான வடிவேலு சற்குணராசா (வயது 61) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், ஆறுகால்மடத்தில் உள்ள உறவினரின் மரணச்சடங்குக்கு அவரும் மனைவியும் வந்திருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மரணச்சடங்கு நிறைவடைந்ததைத் தொடர்ந்து பிற்பகல் 1:30 மணியளவில் அருகில் உள்ள உறவினர் வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது அவர் மயங்கி வீழ்ந்துள்ளார்.
அவர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அங்கு உயிரிழந்துள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan