Paristamil Navigation Paristamil advert login

பிரபுதேவா மகன் கதாநாயகன் ஆகிறாரா ?

பிரபுதேவா மகன் கதாநாயகன் ஆகிறாரா ?

26 மாசி 2025 புதன் 09:30 | பார்வைகள் : 2099


தமிழ் சினிமாவில் நிறைய வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள், ஓரளவிற்கு வாரிசு நடிகைகளும் இருக்கிறார்கள். சினிமாவில் நுழைவதற்கு வேண்டுமானால் 'வாரிசு' என்பது எளிதாக இருக்கலாம். ஆனால், நிலைத்து நிற்க தனித் திறமை வேண்டும்.

நிறைய படங்களுக்கு நடன இயக்குனராகப் பணி புரிந்த சுந்தரம் மாஸ்டரின் மகன்களான ராஜு சுந்தரம், பிரபுதேவா, நாகேந்திர பிரசாத் ஆகியோர் சினிமாவில் அறிமுகமானார்கள். ராஜு சுந்தரம், பிரபுதேவா இருவரும் நடன இயக்குனர்களாக பல மொழிகளில் பணியாற்றி உள்ளார்கள். பிரபுதேவா கதாநாயகனாக உயர்ந்து, இயக்குனராக ஹிந்தி வரையிலும் சென்றார். நாகேந்திர பிரசாத் நடனத்துடன் அவ்வப்போது நடித்தும் வருகிறார். வாரிசுகளாக வந்தாலும் இவர்கள் தங்களது தனித் திறமைகளால் புகழ் பெற்றனர்.

பிரபுதேவா, அவரது முதல் மனைவி ரமலத் ஆகியோரது மகன் ரிஷி ராகவேந்தர் தேவா. கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் ரிஷி மேடையேறி அப்பாவுடன் நடனமாடினார். அந்த வீடியோவைப் பகிர்ந்து, “எனது மகன் ரிஷி ராகவேந்திரா தேவாவை வெளிச்சத்தின் முன்பு முதல் முறையாகப் பகிர்ந்து கொள்வதில் பெருமை. இது நடனத்தை விட அதிகம். இது பெருமை, ஆர்வம், இப்போது ஆரம்பமாகும் பயணம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்