ஹர்திக் பாண்டியா அணிந்த ரூ.7 கோடி வாட்ச்

26 மாசி 2025 புதன் 09:45 | பார்வைகள் : 1169
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா அணிந்து இருந்த கைக்கடிகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்திய லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
242 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி விராட் கோலியின் அதிரடி சதத்தின் மூலம் அபார வெற்றி பெற்றது.
ஹர்திக் பாண்டியா, 8 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து பாபர் அசாம் மற்றும் சவுத் ஷகீல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார்.
இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா அவரின் கையில் கட்டியிருந்த ஆரஞ்சு நிற வாட்ச் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
அந்த வாட்ச் ரிச்சர்ட் மில்லி ஆர்.எம் 27-02 (Richard Mille RM 27-02) மாடல் ஆகும்.
இந்த வாட்ச் லிமிடெட் எடிஷனாக உலக அளவில் 50 வாட்சுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாடல் வாட்ச் ஒன்றின் விலை மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7 கோடியாகும்.
டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடாலுக்காகத்தான் இந்த வாட்ச் மாடல் முதன் முதலில் உருவாக்கப்பட்டது.
ரிச்சர்ட் மில்லி நிறுவனத்தின் வாட்சுகள் சுவிட்சர்லாந்திலுள்ள லெஸ் புருலெக்ஸ் நகரில் தயாரிக்கப்படுகின்றன.
ரிச்சர்ட் மில்லி என்பவரால் அவரின் பெயரிலேயே 2001-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில், ஆண்டுக்கு 4,500 கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.