Paristamil Navigation Paristamil advert login

வாடிக்கையாளர்களைக் கவர - உணவக உரிமையாளர்கள் நூதன திட்டம்!!

வாடிக்கையாளர்களைக் கவர - உணவக உரிமையாளர்கள் நூதன திட்டம்!!

26 மாசி 2025 புதன் 11:59 | பார்வைகள் : 1008


வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்க பிரெஞ்சு உணவக உரிமையாளர்கள் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

உணவகங்களில் உணவு அருந்தும் வழக்கம் பொதுமக்களிடையே குறைவடைந்து வருகிறது. இதற்கு பணவீக்கம் மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளனது. இதனால் மக்களை இலகுவாக கவரும் வண்ணம் "anti-crise" எனும் ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். அதன்படி, உணவகங்களில் குறைந்த கட்டணத்தில் உணவு அருந்தக்கூடியவாறு புதிய 'மெனு'க்களை உருவாக்கியுள்ளனர். 7 தொடக்கம் €9 யூரோக்களுக்குள்ளாக - ஆரம்ப உணவு - பிரதான உணவு - நிறைவு இனிப்பு உணவு போன்றவற்றை நிறைவாக உண்ணக்கூடிய வகையில் புதிய உணவுகளை உருவாக்கியுள்ளனர்.

இதில் குறைந்த அளவு உணவுச் சேர்ப்புகளையும், குறைந்த இலாபத்தையும் இணைத்து இந்த விலை நிர்ணயத்தை சாத்தியமாக்கியுள்ளனர்.

இதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இரண்டு மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Gironde, Hérault, Haute-Vienne, Sarthe, Eure போன்ற நகரங்களில் இதுபோன்ற anti-crise எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். உணவக தொழில் அழிந்து வருவதை இந்த திட்டம் காப்பாற்றும் என உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்