■ Dugny : காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!!

26 மாசி 2025 புதன் 14:38 | பார்வைகள் : 583
Dugny (Seine-Saint-Denis) நகரில் இன்று புதன்கிழமை காலை நபர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பெப்ரவரி 26, புதன்கிழமை காலை 7 மணி அளவில் சனத்தொகை அதிகமாக இருக்கும் நேரத்தில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. நபர் ஒருவர் தனது இரண்டு கைகளிலும் இரு கத்திகளை வைத்துக்கொண்டு பேருந்து தரிப்பிடத்துக்கு அருகே நின்றுகொண்டிருந்ததாகவும், காவல்துறையினர் அழைக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதை அடுத்து, காவல்துறையினர் குறித்த நபரை சரணடையும் பணி பணித்ததாகவும், ஆனால் அவர் காவல்துறையினரை தாக்க முற்பட்டதாகவும், அதை அடுத்தே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பலியான நபர் வீடற்றவர் (SDF) என தெரிவிக்கப்படுகிறது.
**
2023 ஆம் ஆண்டில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் மொத்தமாக 36 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.