Yvelines : 13 வயது சிறுமியைக் காணவில்லை!!

26 மாசி 2025 புதன் 15:32 | பார்வைகள் : 6164
13 வயதுடைய சிறுமி ஒருவரைக் காணாமல் போனதாக காவல்துறையினர் தெரிவித்து, அவர் குறித்த தகவல்கள் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Camille ZAGBO எனும் சிறுமியே காணாமல் போனதாகவும், Yvelines மாவட்டத்தின் La Celle-Saint-Cloud நகரைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அவரைக் காணவில்லை எனவும், அவர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளுமாறும் காவல்துறையினர் கோரியுள்ளனர்.
அவர் 1.60m உயரமுடையவர் எனவும், காணாமல் போன அன்று அவர் இறுதியாக இளஞ்சிவப்பு நிற மேலாடையும், கறுப்பு நிற ஜீன்சும் அணிந்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தெரிந்தவர்கள் 01 39 24 70 80 அல்லது 01 39 24 71 13 எனும் தொலைபேசிகளில் அழைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025