Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பிய பொருட்களுக்கு அமெரிக்காவில் 25% வரி.. சிக்கலில் பிரான்ஸ்!!

ஐரோப்பிய பொருட்களுக்கு அமெரிக்காவில் 25% வரி.. சிக்கலில் பிரான்ஸ்!!

26 மாசி 2025 புதன் 18:43 | பார்வைகள் : 954


ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு 25% சதவீத வரி அறவிடப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்ப் அறிவித்துள்ளார். இதனால் பிரெஞ்சு சந்தை வாய்ப்பில் சிக்கல் எழுந்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக ஆனதன் பின்பு கனடா, மெக்ஸிகோ போன்ற நாடுகளுக்கு 25% சதவீதமாக வரியினை அதிகரித்திருந்தார். அதை அடுத்து, விரைவில் ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த வரி அதிகரிப்பு கொண்டுவரப்படும் என இன்று பெப்ரவரி 26, புதன்கிழமை ட்ரம்ப் அறிவித்தார்.

அது நடைமுறைக்கு வரும் திகதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ட்ரம்ப் தெரிவித்தார். பிரான்சில் இருந்து வைன், சீஸ் உள்ளிட்ட பல உணவுப்பொருட்களுடன் மேலும் பல பொருட்கள் மற்றும் 'மார்க்' பொருட்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வரி அதிகரிப்பினால் நாட்டின் GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) வருவாய் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்