140,000 பேர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!!

26 மாசி 2025 புதன் 18:51 | பார்வைகள் : 1685
பிரான்சில் இருந்து உடனடியாக 140,000 பேர் வெளியேறவேண்டிய OQTF (obligations de quitter le territoire français) ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்ற 2024 ஆம் ஆண்டில் மட்டும் 140,000 பேருக்கு இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக பிரான்சில் இருந்து வெளியேற வேண்டும். அவர்களில் பெரும்பாலானோர் அல்ஜீரியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. பிரான்சுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையே இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பலரை நாட்டை வெளியேற பிரெஞ்சு குடியேற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலகம் தீர்மானித்துள்ளது.
அதேவேளை, சென்ற ஆண்டில் மொத்தமாக 2.5 மில்லியன் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 250,000 பேர் அல்ஜீரியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.