டயானாவின் மகிழுந்து விபத்துக்குள்ளானது எப்படி? - நேற்றைய தொடர்ச்சி!!
30 ஆவணி 2017 புதன் 10:30 | பார்வைகள் : 17973
இளவரசி டயானா பயணம் செய்யும் மகிழுந்து... மிக தரம் மிக்க மகிழுந்து.. Airbag வசதி (ஆபத்தின் போது பலூன் போல் விரிந்து கொள்ளும்) கொண்ட மகிழுந்து... மிக சாமர்த்தியமான சாரதி... இத்தனை இருந்தும் டயானாவின் உயிர் பிரிந்தது எப்படி..??! காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
டயானாவின் இறப்பில் பல்வேறு தரப்பு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டது. பல பொதுமக்கள், ஊடகங்கள், வீதியின் கட்டுமானங்கள் என ஒரு சிறு துரும்பையும் விடாமல் பிரெஞ்சு - பிரித்தானிய படையினர் விசாரித்தனர். இறுதியில் உண்மை வெளி வந்தது.
மகிழுந்தின் பின் இரு இருக்கைகளில் வலதுபக்கம் காதலர் Dodi Fayed அமர்ந்திருக்க, இடதுபக்கம் டயானா அமர்ந்திருந்தார்.
மகிழுந்தின் முன் இருக்கைகளில் Rits ஹோட்டலில் பணிபுரியும் சாரதி Henri Paul, அவருடன் டயானாவின் மெய்பாதுகாவலர் Trevor Rees-Jones ஆகியோரும் அமர்ந்திருக்க.. Pont de l'Alma பாலத்தின் சுரங்கத்தின் கீழ் மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்து.. பாலத்தின் சிமெந்து தூணில் இடித்து நொருங்கியது.
மகிழுந்தின் Airbag வெளிவந்தும் டயானாவின் உயிரை பாதுகாக்க முடியவில்லை. டயானா இருக்கை பட்டி அணிந்திருக்கவில்லை என பின்னர் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்ததுக்கு முக்கிய காரணம், சாரதி Henri Paul மது அருந்தியிருந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு டயானாவின் மரணத்துக்கு Henri Paul தான் காரணம் என இறுதியாக தெரிவிக்கப்பட்டது.
கதை இத்தோடு முடிந்ததா... என்றால் இல்லை!! டயானாவின் இறப்புக்கு 10 மாதங்களுக்கு முன்பு, 'என்னை என் கணவர் மகிழுந்து விபத்தின் மூலம் கொல்லப்பார்க்கிறார்!' என ஒரு கடிதத்தை பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பியிருந்தார் டயானா!!