Paristamil Navigation Paristamil advert login

எங்களுக்கு பாடம் எடுக்கும் தகுதி உங்களுக்கு இல்ல; பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு

எங்களுக்கு பாடம் எடுக்கும் தகுதி உங்களுக்கு இல்ல; பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு

27 மாசி 2025 வியாழன் 05:11 | பார்வைகள் : 294


பாகிஸ்தானில் தான் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கிறது. எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய இடத்தில் நீங்கள் இல்லை,' என்று மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைய கூட்டம் ஜெனிவாவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி, இந்தியா மீது பாகிஸ்தான் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை எழுப்பியது. இதற்கு இந்திய அதிகாரிகள் தக்க பதிலடி கொடுத்தனர்.

பாகிஸ்தானின் சட்டம், நீதி மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் அசாம் நசீர் டரார் பேசுகையில், 'காஷ்மீரில் வசிக்கும் மக்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. ஐ.நா.,வின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச சட்டங்கள் மீறப்படுகிறது. தொடர்ந்து, மனித உரிமைகளும் மீறப்படுகிறது. உடனே இதனை தடுத்து நிறுத்த வேண்டும்,' எனக் கூறினார்.

பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்திய அதிகாரி தியாகி தக்க பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது: பாகிஸ்தானின் ஆதாரமற்ற, போலியான இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் சார்பு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், அந்த நாட்டின் ராணுவ பயங்கரவாதத்தினர் எழுதி கொடுக்கும் பொய்களை பரப்புவதை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது.

யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகளாகும். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பல தசாப்தங்களாக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்த பகுதிகளில், இயல்பு நிலையை கொண்டுவருவதற்கான மக்கள் நம்பிக்கை பெற்ற மத்திய அரசின் நடவடிக்கைகளின் சாட்சியாகும்.

பாகிஸ்தானில் தான் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கிறது. எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்