ஆப்கானிஸ்தான் வரலாற்று வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறிய இங்கிலாந்து

27 மாசி 2025 வியாழன் 05:40 | பார்வைகள் : 133
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் ஆட்டத்தில் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணியை தொடரில் இருந்து வெளியேற்றியுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சத்ரானின் அபாரமான ஆட்டத்தால், ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 325 ஓட்டங்கள் குவித்தது.
இப்ராஹிம் சத்ரான் 146 பந்துகளில் 177 ஓட்டங்கள் குவித்து சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
கேப்டன் ஹஷ்மதுல்லா 40 ஓட்டங்களும், அஸ்மதுல்லா 41 ஓட்டங்களும், முகமது நபி 40 ஓட்டங்களும் எடுத்து ஆப்கானிஸ்தான் அணி வலுவான இலக்கை நிர்ணயிக்க உதவினர்.
326 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக இருந்தது.
தொடக்க வீரர்கள் விரைவாக வெளியேற ஜோ ரூட் மற்றும் பென் டக்கெட் இணைந்து அணியை மீட்டெடுக்க முயற்சி செய்தனர்.
பென் டக்கெட் 38 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஜோ ரூட் ஒற்றை ஆளாக 120 ஓட்டங்கள் குவித்து போராடினார், இறுதியில் அவரும் Azmatullah பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
கடைசி வரை போராடிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 317 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் ப்கானிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.