சென்னையை வந்தடைந்த தல தோனி - இவர் விளையாடும் இறுதி IPL இதுதானா…?

27 மாசி 2025 வியாழன் 05:48 | பார்வைகள் : 134
சென்னை அணியின் முன்னாள் கேப்டன் MS தோனி நடப்பு IPL தொடருடன் ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் அணிந்திருந்த ஆடையின் மூலம் ரசிகர்கள் ஒரு முடிவிற்கு வந்துள்ளனர்.
தோனியின் ரசிகர்கள் தங்கள் ஹீரோ ஐபிஎல்லில் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறார்கள். இருப்பினும், அவர் IPL-இல் இருந்து விடைபெறும் நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது எனலாம்.
IPL ஏலத்தின் போது நேரடியாக தோனி பங்கேற்கவிட்டாலும், மறைமுகமாக அணிக்கு தேவைப்படும் சரியான வீரர்கள் குறித்து ஆலோசனைகளை அவர் தொடர்ந்து வழங்கி வந்தார்.
2025 ஆண்டுக்கான IPL தொடர் மார்ச் 21ஆம் திகதி ஆரம்பமானி மே 25ஆம் திகதி வரை நடைபெறும்.
இதில் சென்னை அணி தனது முதல் போட்டியில் மார்ச் 23ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
வரவிருக்கும் IPL சீசனுக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் முகாமில் சேர எம்எஸ் தோனி புதன்கிழமை சென்னையை வந்தார்.
அதன் போது தோனி அணிந்திருந்த Tshirt அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குறித்த Tshirt-இல் மோர்ஸ் கோட் என்ற நுட்பத்தின் அடிப்படையில் தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மோர்ஸ் கோட் என்ற நுட்பமானது ஒரு தகவலை நேரடியாக தெரிவிக்காமல் மறைமுகமாக உணர்த்துவது ஆகும்.
அந்தவகையில் அவர் அணிந்திருந்த Tshirt-இல் "One Last Time" என்று வெளியிடப்பட்டுள்ளது.
ஒருவேளை இதுவே அவரின் இறுதி IPL தொடராக இருக்கும் என ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர். மேலும் இது தொடர்பில் எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.