அதிவேக TGV தொடருந்துகளை கொள்வனவு செய்யும் மொராக்கோ!!

27 மாசி 2025 வியாழன் 06:23 | பார்வைகள் : 551
பிரான்சிடம் இருந்து மொராக்கோ சில புதிய தொடருந்துகளை கொள்வனவு உள்ளது. 2.8 பில்லியன் யூரோக்கள் பெறுமதியுடைய ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை மொராக்கோ நடாத்த உள்ளது. அதற்கு தயாராகி வரும் மொராக்கோ, சுற்றுலாப்பயணிகளை கவர, போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அதை அடுத்து 168 புதிய தொடருந்துகளை பிரான்ஸ், ஸ்பெயின் போர்சுக்கல்லிடம் இருந்து கொள்வனவு செய்ய உள்ளது.
இதில் பிரான்சின் Alstom நிறுவனத்திடம் இருந்து 18 - TGV தொடருந்துகளை கொள்வனவு செய்ய உள்ளது. அதேவேளை அங்கு 40 கி.மீ தூரத்துக்குரிய தொடருந்து தண்டவாளத்தை அமைக்கும் பணியையும் Alstom மேற்கொண்டுவருகிறது.