பிரெஞ்சு தீவை தாக்கும் புயல்... சிவப்பு எச்சரிக்கை!!
.jpeg)
27 மாசி 2025 வியாழன் 07:14 | பார்வைகள் : 415
மணிக்கு 220 கி.மீ வேகத்தில் தாக்கக்கூடிய புயல் ஒன்று பிரான்சின் ரியூனியன் தீவை தாக்க உள்ளது. அங்கு அதிகூடிய ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Garance என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலினால் பெரும் சேதம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று பெப்ரவரி 27, வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக Météo France அறிவித்துள்ளது.
அங்கு குறைந்தபட்சமாக 150 கி.மீ தொடக்கம் அதிகபட்சமாக 220 கி.மீ வேகம் வரை புயல் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அவசர தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புயல் தெற்கு பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி சென்று நாளை வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்படுகிறது.