டயானாவின் மூன்றரை மணிநேர போராட்டம்! - நேற்றைய தொடர்ச்சி!!
29 ஆவணி 2017 செவ்வாய் 11:30 | பார்வைகள் : 17774
விபத்து இடம்பெற்றது நள்ளிரவு 12.23 மணிக்கு.. ஆனால் டயானா இறந்தது அதிகாலை 4 மணிக்கு.
விபத்தின் பின்னர் 12.30 மணிக்கு முதல் காவல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஒரு மணிக்கு, மகிழுந்தை நிமிர்த்தி கதவுகளை உடைத்து டயானாவை வெளியில் தூக்கினார்கள்.
சில முதலுதவிகளை மேற்கொண்டுவிட்டு 01.18 மணிக்கு SAMU நோயாளர் காவு வண்டியில் டயானாவை ஏற்றி, Salpêtrière மருத்துவமனைக்கு வந்தடையும் போது நேரம் 02.06 மணி.
விபத்தில் டயானாவின் உடம்பில் பல உள் காயங்கள், நரம்பு வெடிப்புகள்.. இதயத்தை பாதுகாக்கும் எலும்புகள் உடைந்து இதயத்தை குத்தி சிதைக்க... டயானாவை காப்பாற்ற போதிய நேரம் இருக்கவில்லை. மூன்றரை மணிநேரங்கள் உயிருக்கு போராடிய டயானா, அதிகாலை 4 மணிக்கு உயிரிழந்தார்.
******
விபத்தில் அவருடன் சேர்ந்து சாரதி Henri Paul, திரைப்படத் தயாரிப்பாளரும் டயானாவின் காதலருமாகிய Dodi Fayed உம் உயிரிழக்க... மெய்பாதுகாவலர் Trevor Rees-Jones பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்து இடம்பெற்ற சில நிமிடங்களில் டயானாவின் கணவர் பரிசுக்கு இரவு 2 மணி அளவில் வந்தார். டயானாவின் உடலத்தோடு பிரித்தானியாவுக்கு அதிகாலை புறப்பட்டார்.
டயானாவின் இறுதிச்சடங்கில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். ஹிலாரி கிளிண்டன் உட்பட பிரெஞ்சு ஜனாதிபதி Jacques Chirac உம் கலந்துகொண்டிருந்தார்.
இளவரசி டயானாவின் இறுதிச்சடங்கை காண பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் 30 இலட்சம் மக்கள் திரண்டனர். Westminster Abbey தேவாயலத்துக்கு முன்னால் மாத்திரம் பத்து இலட்சம் மக்கள் கூடினார்கள். தொலைக்காட்சிகளில் 2.2 பில்லியன் மக்கள் நேரடியாக இறுதிச்சடங்கை பார்வையிட்டனர்.
விபத்து இடம்பெற்றது எப்படி..? என விசாரணைகள் ஆரம்பித்தன..
நாளை!!