Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானம்

இலங்கையில் நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானம்

27 மாசி 2025 வியாழன் 07:30 | பார்வைகள் : 223


நீதிமன்றத்தினுள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னர் சிறைச்சாலைகளில் நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தொலைபேசி தொடர்பு தடுப்பு சாதனங்களின் நவீனமயமாக்கலும் சேர்க்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் ஏற்கனவே ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், கட்டடங்களின் தன்மை காரணமாக தொலைபேசி இணைப்புகளை முழுமையாக முடக்க முடியவில்லை என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பொருத்தப்பட்டுள்ள ஜாமர்களின் குறைபாடுகள் காரணமாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் தொலைபேசி இணைப்புகள் மூலம் வெளி தரப்பினருடன் உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் தங்கியிருந்து கைதிகள் போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் குற்றச்செயல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்