இலங்கையில் வேலை வாய்ப்பு தொடர்பில் போலி விளம்பரங்கள் - மக்களுக்கு எச்சரிக்கை

27 மாசி 2025 வியாழன் 08:14 | பார்வைகள் : 186
இலங்கையில் நிலையான வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படும் விளம்பரங்கள் போலியானது என தொழில் அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற விளம்பரங்களின் ஒரே நோக்கம் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களைத் திருடுவது என்று தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இதுபோன்ற போலி விளம்பரங்களால் மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.