சிறந்த திரையங்குகளின் உலகப் பட்டியல்... Grand Rex முதலிடம்!!

27 மாசி 2025 வியாழன் 10:53 | பார்வைகள் : 894
உலகம் முழுவதும் உள்ள 50 சிறந்த திரையரங்குகளின் பட்டியலை Time Out இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பரிசில் உள்ள Grand Rex திரையரங்கு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
'உலகில் உள்ள மிக அழகான திரையரங்கம்' எனும் பட்டியலை Time Out இதழ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டில் இரண்டாம் இடத்தினை பெற்ற Grand Rex திரையரங்கு, 2025 ஆம் ஆண்டில் முதலிடத்தை பிடித்துள்ளது.
பரிஸ் 2 ஆம் வட்டாரத்தில் உள்ள Grand Rex திரையரங்கம், 1932 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 90 ஆவது ஆண்டு நிறைவுநாளை 2022 ஆம் ஆண்டில் கொண்டாடியது.
Grand Rex அரங்கு, RealD என அழைக்கப்படும் "polarized light" தொழிழ்நுட்பத்தைக் கொண்ட 3D திரையைக் கொண்டதாகும். Champo திரையரங்கு 10 ஆம் இடத்திலும், Studio 28 திரையரங்கு 25 ஆம் இடத்தும்