ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த பட அறிவிப்பு..!

27 மாசி 2025 வியாழன் 11:08 | பார்வைகள் : 417
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, அந்த படத்தின் ஹீரோவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த ’அமரன்’ திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த நிலையில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், தற்போது இந்த படம் குறித்த அறிவிப்பை இயக்குனர் ராஜ்குமார் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
"சிவராத்திரி தினத்தில், சிவபெருமான் அருளுடன் அனைவரும் அமைதியாகவும், பாசிட்டிவ் எனர்ஜியுடன் இருக்க வாழ்த்துகிறேன்," என்று கூறிய அவர், தனுஷின் 55வது படத்தை தான் இயக்குவதாக அறிவித்து, தனுஷுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த புகைப்படத்தின் பின்னணியில், இந்த படத்திற்கான பூஜை நடத்தப்பட்ட காட்சிகள் இருப்பதை அடுத்து, தனுஷின் 55வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார் என்பது உறுதியாகியுள்ளது. அத்துடன், இந்த பதிவில் "நற்றுணையாவது நமசிவாயமே" என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், இதில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும் அடுத்தடுத்து வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.