யுத்த நிறுத்தத்தின் அடுத்த கட்டம் குறித்த அச்சத்திற்கு மத்தியில் காசாவில் குளிரினால் குழந்தைகள் இறக்கின்றன- என்பிசி நியுஸ்

27 மாசி 2025 வியாழன் 11:55 | பார்வைகள் : 132
குழந்தைகளிற்கான போர்வையில் போர்த்தப்பட்டு தந்தையின் அரவணைப்புடன் ஷாம் அல் சான்பாரி,இரண்டுகிழமைக்கு முன்னர் மிகவும் கடினமான முயற்சியின் பின்னர் சாத்தியமான யுத்த நிறுத்தம் காரணமாக காசாவில் ஒரளவு அமைதி நிலவிய இரண்டு கிழமைக்கு முன்னர் உலகிற்கு வந்தார்.
எனினும் காசா யுத்தம் அவளின் உயிரையும் பறித்தது.
திங்கட்கிழமை இரவு காசாவில் சமீபத்தில் கடும் குளிரினால் உயிரிழந்த ஏழு குழந்தைகளில் ஒருவராகஷாம் அல் சான்பாரி மாறினாள்.சுகாதார அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
அவளது குடும்பம் ஆயிரக்கணக்கான ஏனைய பொதுமக்கள் போல கடும் குளிரில் தற்காலிக கூடாரங்களில் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்களால் அவர்களின் வீடுகள் வாழமுடியாதவையாக மாற்றப்பட்ட பின்னரே அவர்கள் தற்காலிக கூடாரங்களில் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளனர்.
நள்ளிரவு குழந்தையின் தாயார் அவளை உறங்கச்செய்தார் என தந்தை முகமட் தவ்பீக் அல்சன்பாரி என்பிசி செய்தியாளர்களிற்குஇதனை தெரிவித்தார்.
காசாவின் வடக்குகிழக்கில் உள்ள பெய்ட் இன் கனூனில் அவர் இதனை தெரிவித்தார்.
காலையில் அவளை நாங்கள் எழுப்ப முயன்றோம் அவள் எழும்பவில்லை என அவர் தெரிவித்தார்.
தனது மகளின் சிறிய உடல் சிறிய புதைகுழிக்குள் வைக்கப்படுவதை பார்த்தபடி அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரகாலப்பகுதியில் கடும் குளிரால் மேலும் ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளன என காசாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் முனீர் அல் பேர்ஸ் தெரிவித்தார்.
காசாவில் வீடுகள் அழிக்கப்பட்ட குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களிலும் ஏனைய தற்காலிக தங்குமிடங்களிலும் உறங்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
சிலா அப்துல் காதர் என்ற இரண்டு வயது குழந்தையே இறுதியாக கடும்குளிர் காரணமாக உயிரிழந்தது என பாலஸ்தீன சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் முனீர் அல் பேர்ஸ் தெரிவித்தார்.
எனது மகள் இறப்பதற்கு முன்னர் 100 வீதம் ஆரோக்கியமானவளாக காணப்பட்டாள்,விளையாடினால் வழமை போல சிரித்தால் என என தந்தை முகமட் தவ்பீக் அல்சன்பாரி தெரிவித்தார்.
ஆனால் நான் கூடாரத்தில் வசிக்கின்றேன் கடும் குளிர் அவள் எப்படி உயிர் தப்பமுடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
காசாவில் கடந்த ஒருவாரகாலமாக இரவில் குளிர் 10டிகிரிக்கும் குறைவானதாக காணப்படுகின்றது,என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் குளிரினால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம்.
ஒருவருடத்திற்கு மேலாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் காரணமாக காசாவின் மருத்துவமனைகள் முற்றாக அழிந்துள்ளன. இதன் காரணமாக உயிரை பாதுகாப்பதற்காக அடிப்படை மருத்துவ வசதிகளை காசா மக்கள் பெறுவது கூட சாத்தியமற்ற விடயமாகியுள்ளது.
காசாவில் பாடசாலைகள்மருத்துவமனைகள் உட்பட 70 வீதமான உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும்,65வீதமான வீடுகளும் வீதிகளும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.
ஹமாஸ் ஒக்டோபர் 2023ம் திகதி ஒக்டோபர் மாதம் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக 48300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் ஒரு இரண்டுவயது குழந்தையாவது உயிரிழந்துள்ளதை பதிவு செய்துள்ளதாக ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த பாலஸ்தீனியர்களிற்கான மருத்துவ உதவி என்ற பிரித்தானிய அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
குளிர் காரணமாகவே அந்த குழந்தை உயிரிழந்தது,குளிர் பாதிப்பு காரணமாக மேலும் மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நன்றி virakesari