Paristamil Navigation Paristamil advert login

இளவரசி டயானாவின் இறுதி பயணம்!

இளவரசி டயானாவின் இறுதி பயணம்!

28 ஆவணி 2017 திங்கள் 10:30 | பார்வைகள் : 19230


1997  ஆம் ஆண்டு.. ஓகஸ்ட் 31 ஆம் திகதி.. அன்றைய நாள் காலை விடியும் போது இந்த உலகத்துக்கே ஓர் அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. 'இளவரசி டயானா இறந்துவிட்டார்!' 
 
இத்தாலியின் Sardinia இல் இருந்து பரிசுக்கு ஓகஸ்ட் 30 ஆம் திகதி இரவு தனியார் விமானத்தில் வந்து இறங்கினார் இளவரசி டயானா. சோம்ப்ஸ் எலிசேக்கு அண்மித்த பகுதியில் உள்ள  Hôtel Ritz இல் இளவரசி டயானா தங்குவதாக ஏற்பாடு. 
 
இளவரசி டயானா, அவரது மெய்காப்பாளர், மகிழுந்து சாரதி இவர்களுடன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் Dodi Fayed ஆகிய நால்வரும் தொடர்ச்சியான 9 நாட்கள் சுற்றுலாவின் பின்னர், இலண்டன் திருப்புவதற்கு முதல் பரிசுக்கு வந்திருந்தனர். 
 
இவர்களுக்கு 1994 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கறுப்பு நிற  Mercedes-Benz S280 (பென்ஸ்) மகிழுந்து வழங்கப்படுகிறது. Hôtel Ritz இல் தங்குவதற்காக சென்று கொண்டிருந்தனர். 
 
பரிசின் Pont de l'Alma பாலத்தின் சுரங்கம். 105 தொடக்கம் 150 கிலோமீட்டர்கள் வேகம் வரை சென்றுகொண்டிருந்த மகிழுந்து, கட்டுப்பாட்டை இழந்து சுவற்றுடன் மோதுப்பட்டு, திசை திரும்பி வீதியுடன் இழுத்துச்செல்லப்படு நொருங்கியது!! 
 
விபத்து பதிவாகும் போது, மறுநாள் ஆகியிருந்தது. அன்று ஓகஸ்ட் 31 ஆம் திகதி நள்ளிரவு 00:23 மணி! 
 
பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மன் அமெரிக்கா உட்பட உலக நாடுகள் எல்லாமே அதிர்ச்சியில் உறைந்து நின்றது. டயானாவின் முன்னாள் கணவர் சார்லஸ் பரிஸ் வந்தடைந்தார். 
 
டயானா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
 
நாளை..

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்