‘கூலி’ படத்தில் இணைந்த பிரபல நடிகை

27 மாசி 2025 வியாழன் 12:01 | பார்வைகள் : 205
ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிக்கும் பிரபல நடிகையின் புகைப்படத்தை முகத்தை மறைத்து வெளியிட்டிருக்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம், இது தொடர்பான அறிவிப்பு நாளை (பிப்.27) வெளியாகும் என அறிவித்துள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘கூலி’. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாயிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பாலிவுட் நடிகர் ஆமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் தள பக்கத்தில் நடிகை ஒருவரின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. அவர் யார் என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நடிகை பூஜா ஹெக்டே என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் நாளை காலை 11 மணிக்கு இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.