Paristamil Navigation Paristamil advert login

துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது?

துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது?

27 மாசி 2025 வியாழன் 14:12 | பார்வைகள் : 204


கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, சிம்ரன், திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛துருவ நட்சத்திரம்'. இப்படம் துவங்கும் முன்பே டீசர் எல்லாம் வெளியிட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகமாக்கினர். ஆனால் 7 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப்படம் உருவாகி கிடப்பில் கிடந்தது. நிதி பிரச்னை உள்ளிட்ட பல சிக்கலால் இந்த படம் வெளியீட்டில் இருந்து தாமதமாகி வந்தது.

கடந்த ஆண்டில் கூட இப்படம் வெளியாகும் என ரிலீஸ் தேதி அறிவித்து மீண்டும் தள்ளிப்போனது. சமீபத்தில் 'மதகஜராஜா' படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதால் அடுத்தகட்டமாக துருவ நட்சத்திரம் படத்தை திரைக்கு கொண்டு வர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் துருவ நட்சத்திரம் படத்தை வருகின்ற மே 1ம் தேதி அன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், இதே தேதியில் சூர்யாவின் ரெட்ரோ படம் திரைக்கு வருகிறது என ஏற்கனவே அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்