பிரென்ஸ்-இஸ்ரேல் பிணையக்கைதியின் சடலம் மீட்பு.. ஜனாதிபதி மக்ரோன் இரங்கல்!!
.jpeg)
27 மாசி 2025 வியாழன் 16:27 | பார்வைகள் : 1136
ஹமாஸ் அமைப்பினரால் பிணையக்கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட பிரான்ஸ்-இஸ்ரேன் குடியுரிமை கொண்ட Ohad Yahalomi கொல்லப்பட்டுள்ளார்.
2023, ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட அவர், கொல்லப்பட்டுள்ளதாக, இன்று பெப்ரவரி 27 ஆம் திகதி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட்டவர்களில் அவரும் அவரது 12 வயதுடைய மகனும் இருந்த நிலையில், மகன் நவம்பர் 27 - 2023 அன்று முதலாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், Ohad Yahalomi மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு ஜனாதிபதி மக்ரோன் இரங்கல் தெரிவித்துள்ளார்.