Paristamil Navigation Paristamil advert login

மக்ரோனின் மாத சம்பளம் - முன்னரும்.. பின்னரும்!!

மக்ரோனின் மாத சம்பளம் - முன்னரும்.. பின்னரும்!!

22 ஆவணி 2017 செவ்வாய் 13:30 | பார்வைகள் : 18527


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் மாத சம்பளம் குறித்து முன்னதாக பிரெஞ்சு புதினத்தில் குறிப்பிட்டிருந்தோம். மாத வருமானமாக 14,836 யூரோக்கள் பெற்றுக்கொள்கிறார். 
 
ஆனால்.. மக்ரோன் ஜனாதிபதியாக ஆவதற்கு முன்னர் வங்கி ஒன்றில் பணி புரிந்ததாக அறிந்திருக்கிறோம் இல்லையா? அப்போது எவ்வளவு சம்பளம் வாங்கினார்??!
 
ஜனாதிபதி மக்ரோன் Rothschild & CIE Banque வங்கியில் முன்னதாக பணியாற்றினார். இந்த வங்கி முதலீடு, நிதி சேமிப்பு போன்ற பல உயர்தர வசதிகளை வழங்கி வரும் வங்கி. இந்த வங்கியில் இம்மானுவல் மக்ரோன் நிதி அதிகாரியாக (Inspecteur des finances) ஆக பணி புரிந்தார். 
 
தனது வேலையில் மிக திறமையாகவும், கணக்குகளில் அசாத்திய செயற்பாடுகளையும் கொண்ட மக்ரோன்.. வங்கி சேவைகளிலேயே அதிக வருமானத்தை ஈட்டினார். அவருக்கு மாத சம்பளமாக 50,000 யூரோக்கள் வழங்கப்பட்டது. 
 
2007 ஆம் ஆண்டு பிரிஜித் மக்ரோனை திருமணம் செய்துகொண்டதோடு.. 2008 ஆம் ஆண்டு தனது வேலையை உதறிவிட்டு.. அரசியலில் இறங்கினார் மக்ரோன். அதன் பின்னர் அவர் எப்போதும் அதே அளவு வருமானத்தை பெறவில்லை. இப்போது ஜனாதிபதியாக இருந்தபோதும் கூட.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்