ஐந்து லட்சம் பரிசுத் தொகை கைக்கு எட்டாமலே போனது. LOTO.

28 மாசி 2025 வெள்ளி 07:43 | பார்வைகள் : 1421
பிரான்ஸ் ஊடகங்களை தாண்டி சர்வதேச ஊடகங்களில் மிகவும் சுவார்சியமாக பேசப்படும் இந்த செய்தி பிரான்சின் தென்பகுதி நகரமான Toulouse-ல் நடைபெற்றுள்ளது. அங்கு வீதியில் வாழும் இரு நபர்கள், தரிப்பிடத்தில் நின்ற காரில் இருந்து ஒருவரின் கைப்பையை திருடி அங்குள்ள tabac கடையொன்றில் சிகரெட் பக்கற்றுகளையும் அதிர்ஷ்டச் சீட்டுக்கள் சிலவற்றையும் வாங்கினர் அந்த கைப்பையில் இருந்த வங்கியட்டையின் மூலம். இந்த தகவல் பறிகொடுத்தவர் தனது வங்கிக்கு வழங்கிய முறைப்பாட்டின் மூலம் தெரியவந்துள்ளது.
வாங்கப்பட்ட அதிர்ஷ்ட சீட்டுகளின் தொடர் எண் மூலம் அவை காவல்துறையினரால், அதிர்ஷ்டச் சீட்டுக்களின் தலைமை நிறுவனமான (FDJ) நிறுவனத்தின் உதவியுடன் உண்ணிப்பாக கண்காணிக்கப்பட்டது. அதிர்ஷ்டம் வங்கியட்டையை திருடி வாங்கிய நபர்களின் பக்கம் இருக்க அவர்களுக்கு 500,000€ க்கள் பரிசுத் தொகை விழுந்துள்ளது. ஆனால் அதனை பெறுவதில் சிக்கல் உள்ளது.
வங்கியட்டையை பறிகொடுத்த ஜீன் டேவிட் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் களவாடிய நபர்களை தேடிவருகின்றனர். யாராவது குறித்த அதிர்ஷ்ட சீட்டின் தொடர் எண் கொண்ட அதிர்ஷ்ட சீட்டை கொண்டு வந்தால் தமக்கு அறிவிக்கும்படி காவல்துறையினர் ஏற்கனவே அதிர்ஷ்ட சீட்டுகளின் தலைமை அலுவலகத்தில் (FDJ) முறைப்பாடு செய்துள்ளனர்.
FDJ-யன் சட்டப்படி அதிர்ஷ்ட சீட்டுகளில் பரிசு தொகை கிடைத்தால் அதனை ஒரு மாதத்துக்குள் குறித்த அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்களின் தலைமையகத்தில் பதிவு செய்து பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் இல்லையெனில் அவை செல்லுபடியற்றுப் போகும். மேற்குறிப்பிட்ட அதிர்ஷ்ட சீட்டு கடந்த பெப்ரவரி மாதம் 2-ம் தேதி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது எனவே இன்னும் இரு நாட்களில் அந்தத் தொகை கைக்கு எட்டாமல் போகும் அந்த அதிர்ஷ்டசாலிகளுக்கு.