Paristamil Navigation Paristamil advert login

மாஸ்டர்ஸ் லீக் டி20 - சிக்ஸர்களை பறக்கவிட்ட கிறிஸ் கெய்ல்!

மாஸ்டர்ஸ் லீக் டி20  - சிக்ஸர்களை பறக்கவிட்ட கிறிஸ் கெய்ல்!

28 மாசி 2025 வெள்ளி 08:05 | பார்வைகள் : 130


மாஸ்டர்ஸ் லீக் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

நவி மும்பையில் நேற்று நடந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் கேப்டன் கிறிஸ் கெய்ல் மற்றும் டிவைன் ஸ்மித் இருவரும் ருத்ரதாண்டம் ஆடினர்.

இந்தக் கூட்டணி 43 பந்துகளில் 77 ஓட்டங்கள் குவித்தது. ஸ்மித் 25 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சிக்ஸர்களை பறக்கவிட்ட கிறிஸ் கெய்ல் (Chris Gayle) 19 பந்துகளில் 39 ஓட்டங்கள் விளாசினார். இதில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்து வந்த வால்டன் (9), கிர்க் எட்வார்ட்ஸ் (9) விரைவில் வெளியேற, தியோநரைன் மற்றும் நர்ஸ் அதிரடி காட்ட மேற்கிந்திய தீவுகள் அணி 179 ஓட்டங்கள் குவித்தது.

தியோநரைன் 23 பந்துகளில் 35 ஓட்டங்களும், நர்ஸ் 13 பந்துகளில் 29 ஓட்டங்களும் எடுத்தனர். பனேசர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது. அதிகபட்சமாக பில் மஸ்டர்டட் 35 (19) ஓட்டங்களும், கிறிஸ் ஸ்கோஃபீல்ட் 32 (26) ஓட்டங்களும் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் டெய்லர், ராம்பால் மற்றும் பென் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்