Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் இளம் பெண்ணின் முடிவால் துயரத்தில் உறவினர்கள்

இலங்கையில் இளம் பெண்ணின் முடிவால் துயரத்தில் உறவினர்கள்

28 மாசி 2025 வெள்ளி 08:20 | பார்வைகள் : 380


தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஹம்பந்தோட்டை வலஸ்முல்ல பகுதியை சேர்ந்த 24 வயதான இமாஷி ஹெட்டியாராச்சி என்ற இளம் பெண்ணே இந்த முடிவை எடுத்துள்ளார். 

சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான குறித்த பெண், காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வலஸ்முல்ல தயாரத்ன வீதியிலுள்ள வீட்டிலுள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு அவரை உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ரிக்ரொக் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான இமாஷி, அதிகளவான விசிறிகளை கொண்ட இளம் பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்