குறைந்த விலையில் 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய Samsung

28 மாசி 2025 வெள்ளி 08:36 | பார்வைகள் : 194
Samsung நிறுவனம் M Series-ல் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான Samsung இந்திய சந்தையில் M Series-ல் புதிய Samsung Galaxy M16 மற்றும் Samsung Galaxy M06 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்களில் 6.7-inch display, 50-megapixel camera, 25W charging support கொண்ட 5000mAh battery உள்ளது.
நிறுவனம் Galaxy M16 ஸ்மார்ட்போனை மூன்று RAM மற்றும் ஒற்றை Storage விருப்பங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதேபோல், M06 இரண்டு RAM மற்றும் ஒற்றை Storage விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் இதன் ஆரம்ப விலை ரூ.9,999 ஆகும். வாங்குபவர்கள் மார்ச் 5 முதல் Amazon-ல் இருந்து இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும்.