பிரான்சில் இருந்து 10 நாடுகளை ஊடறுக்கும் நெடுஞ்சாலை!
14 ஆவணி 2017 திங்கள் 14:33 | பார்வைகள் : 18753
இந்த தலைப்பு உங்களுக்கு எத்தனை ஆச்சரியத்தை தருகிறதோ... மேற்கொண்டு நீங்கள் வாசிக்கும் தகவல்களும் மேலும்பல ஆச்சரியத்தை தர உள்ளது.
ஐரோப்பாவின் மிக நீ...ளமான சாலை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது E40 சாலை. E15 எனும் பெயருடன் பிரான்சின் கலே பகுதியில் ஆரம்பிக்கும் இந்த சாலை.. கமல்ஹாசன் போல் பல அரிதாரங்கள் பூசிக்கொண்டு பல பெயர்களில் பல நாடுகள் நகரங்களை தாண்டி பயணிக்கிறது.
கலே பகுதியில் ஆரம்பிக்கிறது என சொன்னோம் இல்லையா... நேரே பிரான்சின் எல்லை Dunkirk நகரில் E402 எனும் பெயர் மாற்றம் கண்டு, நேரே பெல்ஜியத்துக்குள் நுழைகிறது. பெல்ஜியத்தின் Brussels நகரம் உள்ளிட்ட பத்து முக்கிய நகரங்களை ஊடறுத்து ஜெர்மனிக்குள் நுழைகிறது. Brussels நகரில் E17 என பெயர் கொண்டுள்ளது இச்சாலை!
பின்னர், ஜெர்மனியில் இருந்து போலாந்துக்கும்... உக்ரைனுக்கும்...ரஷ்யா..கசகஸ்தான்.. Uzbekistan, Turkmenistan போன்ற நாடுகளில் எல்லாம் பயணித்து... இறுதியாக Kyrgyzstan எனும் நாட்டில் வந்து முடிவடைகிறது. இந்நாட்டில் முடிவடையும் போது வீதியின் பெயர் E123 என்பதாகும்.
இந்த வீதியின் நீளம் மொத்தம் 8000 கிலோ மீட்டர்கள் (4,971 மைல்கள்). ஐரோப்பாவின் மிக மீண்ட சாலையின் ஆரம்ப புள்ளி நம்நாட்டில் ஆரம்பிப்பதும் ஒரு பெருமை தானே??!