Garance புயல் : 234 கி. மீ பதிவு.. இன்றும் சிவப்பு எச்சரிக்கை!!

28 மாசி 2025 வெள்ளி 09:03 | பார்வைகள் : 554
பிரான்சின் ரீயூனியன் தீவினை புயல் தாக்கி வருகிறது. நேற்று வியாழக்கிழமை அதிகபட்சமாக மணிக்கு 234 கி. மீ வேகத்தில் புயல் தாக்கியுள்ளது.
இந்நிலையில், இன்று பெப்ரவரி 28, வெள்ளிக்கிழமையும் அனர்த்தம் தொடர்வதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் வெளியே செல்லவேண்டாம் எனவும், வாகன போக்குவரத்துக்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை மாலை Piton Sainte-Rose நகரில் அதிகபட்சமாக 234 கி. மீ வேகத்தில் புயல் வீசியது. இன்று காலை நிலவரப்படி 145,000 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், அங்குள்ள Saint-Denis விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.