Paristamil Navigation Paristamil advert login

வாகனங்கள் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

வாகனங்கள் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

28 மாசி 2025 வெள்ளி 11:05 | பார்வைகள் : 225


இலங்கையில் 5 வருடங்களுக்குப்பின் வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய அடுத்தவாரம் முதல் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் விற்பனைக்கு வரும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட இரண்டாவது தொகுதி வாகனம் நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன.

ஜப்பானில் இருந்து 196 வாகனங்கள் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதன்படி, வெகன் ஆர், எல்டோ, வெசல் உள்ளிட்ட வாகனங்கள் ஜப்பானிலிருந்து நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வாகனங்கள் அடுத்த வாரமளவில் விற்பனைக்கு வரும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

வெகன் ஆர் காரை 6,500,000 ரூபாய் முதல் 7 ,500,000 ரூபாய் வரையிலும், ஆர்எஸ் காரொன்றை 8,000,000 ரூபாய் முதல் 10,000,000 ரூபாய் வரையிலும், வெசல் ரக காரை 165 இலட்சம் ரூபாய் முதல் 200 இலட்சம் வரையிலும் விற்பனை செய்ய முடியும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்