விலையதிகரிப்பு இருப்பினும் இலாபமும் அதிகரிப்பு. SNCF.

28 மாசி 2025 வெள்ளி 11:09 | பார்வைகள் : 917
பிரான்சில் தொடர்ச்சியாக நீண்ட தூர தொடரூந்து சேவைகளின் பயணச் சீட்டுகளின் விலைகள் அதிகரித்து வந்தாலும், பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் SNCF கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிக இலாபத்தையும் ஈட்டி வருகிறது. SNCF வெளியிட்டுள்ள தகவலின் படி 2024-ல் அதன் இலாபம் 1.6 பில்லியன் யூரோக்கள் என தெரியவந்துள்ளது.
2023-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பயணச்சீட்டுகளின் விலை 2% சதவீதத்திற்கும் அதிகமான அதிகரித்துள்ளது, இருப்பினும் பயணிகளின் எண்ணிக்கை 4% சதவீதத்தால் அதிகரித்து உள்ளது. இதற்கு காரணம்.
மாணவர்கள், அதிகாரிகள், உயர் அதிகாரிகள், என பலரும் விமானத்தை விடவும் தொடரூந்து சேவையையே அதிகம் நாடுகின்றனர். மிகக் குறைந்த நேரத்தில் தங்களுக்கு விரும்பிய பகுதிகளுக்கு தொடரூந்தில் பயணிப்பது நேரத்தை சேமிக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். விமானத்தில் பயணிக்கும் போது பயணிக்கும் நேரம் குறைவாக இருந்தாலும் விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டிய நேரம், அங்கு காத்திருக்க வேண்டிய நேரம், என பல மணி நேரங்களை அங்கு செலவிட நேரிடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு தொடரூந்தில் பயணிக்கின்ற பொழுது தமது வேலைகளில் பெரும் பகுதியை அந்த நேரத்திலேயே செய்து முடித்து விடுகின்றனர். ஆனால் விமானத்தில் இருக்கக்கூடிய சில தடைகள் தங்களது வேலைகளை கணினி மூலமோ ஏனைய வழிகளிலோ செய்வது சாத்தியம் அற்றது இதற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.
2024-ம் ஆண்டில் மட்டும் சுமார் 130 மில்லியன் மக்கள் SNCF தொடரூந்து சேவைகளான TGV, Inoui மற்றும் Ouigo பயன்படுத்தியுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.