10 நாட்கள் பனி மலைகளில் தொலைந்த இளைஞர் பற்பசை உண்டு உயிர்பிழைத்த அதிசயம்!

28 மாசி 2025 வெள்ளி 11:12 | பார்வைகள் : 146
சீனாவில் 10 நாட்கள் பனி மலைகளில் தொலைந்த இளைஞர் பற்பசை உண்டு உயிர்பிழைத்துள்ளார்.
சீனாவின் ஆபத்தான Ao-Tai Line மலைப்பாதையில் தனியாக பயணித்த 18 வயது சன் லியாங் (Sun Liang), பனி மற்றும் கடும் குளிரில் 10 நாட்கள் உயிர்தப்பிய சம்பவம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
பிப்ரவரி 8 அன்று, Hubei பகுதியைச் சேர்ந்த லியாங், 80 கிமீ நீளமுள்ள பாதையை கடக்கத் தொடங்கினார்.
2018 முதல் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டிருந்த இந்த பாதையில் 2012-2017 காலகட்டத்தில் 46 பேர் உயிரிழந்தனர்.
இருப்பினும், சவால்களை விரும்பும் சிலர் தொடர்ந்து இப்பாதையில் பயணிக்க முயன்றனர்.
லியாங் தனது பயணத்தை இரு வாரங்கள் திட்டமிட்டிருந்தாலும், எதிர்பாராத காலநிலை மாற்றம் அவரை பெரிதும் பாதித்தது.
மின்சாரம் மற்றும் வெப்பநிலை கையாள உதவிய கருவிகள் -32°C வெப்பநிலையில் செயலிழந்தன.
ஐந்தாவது நாளில் ஒரு உயரத்தில் இருந்து விழுந்து மணிக்கட்டு முறிவு ஏற்பட்டதுடன், தன்னிடமிருந்த உணவு மற்றும் வழிகாட்டி சாதனங்களை இழந்தார். ஒரு கட்டத்தில் தான் உயிர்வாழ்வது கடினம் என்று உணர்ந்தார்.
வெந்நீர் இல்லை, எனவே பனியை உருக வைத்து குடித்துள்ளார்.
காட்டில் காணப்பட்ட பாசிகள் மற்றும் பூஞ்சைகள் விஷமாய் இருக்கலாம் என்பதால், அவற்றை உணவாக எடுத்துக்கொள்ளவில்லை.
தவறுதலாக எடுத்துச் சென்ற பற்பசையை உணவாக அவ்வப்போது சாப்பிட்டுள்ளார்.
பத்தாவது நாளில், புகை வாசனை உணர்ந்து குரல் கொடுத்து மீட்புக் குழுவினரை அணுகியுள்ளார். மீட்பு குழு அவருக்கு உடனடி உணவு மற்றும் தண்ணீர் வழங்கி மீட்டது.
இதனிடையே, லியாங்கை மீட்க அவரது குடும்பத்தினர் 80,000 யுவான் செலவிட்டனர்.
"மலைகளை என்னால் வெல்ல முடியாது, ஆனால் மலை தான் என்னை வாழ விட்டது" என்ற ஒப்புகைப்போடு தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.