நயன்தாராவுக்கு வில்லனாகும் அருண் விஜய்

28 மாசி 2025 வெள்ளி 11:16 | பார்வைகள் : 351
தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் அருண் விஜய்க்கு திருப்புனையை ஏற்படுத்திய படம் என்றால் அது என்னை அறிந்தால் தான். கெளதம் மேனன் இயக்கிய அப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக விக்டர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அருண் விஜய். அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து கோலிவுட்டில் சக்சஸ்புல் ஹீரோவாக மட்டுமின்றி சக்சஸ்புல் வில்லனாகவும் மிரட்டி வருகிறார் அருண் விஜய்.
அந்த வகையில் இவர் தற்போது இட்லி கடை படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தை தனுஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக தான் அருண் விஜய் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளாராம். இப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது. அன்றைய தினம் அஜித்தின் குட் பேட் அக்லி படத்துக்கு போட்டியாக இட்லி கடை ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், அருண் விஜய்க்கு அடுத்ததாக ஒரு பிரம்மாண்ட படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம். அதன்படி சுந்தர் சி இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார். இப்படம் சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ளதாம். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதம் 15ந் தேதி தொடங்க இருக்கிறதாம்.
மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க நடிகர் அருண் விஜய் அதிகளவில் சம்பளம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அது உறுதியானால் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிப்பது உறுதியாகிவிடும். இது மட்டும் ஓகே ஆனால் நடிகை நயன்தாரா உடன் அருண் விஜய் நடிக்கும் முதல் படமாக இது அமையும். மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.