ஒரு மில்லியன் மோசடி! - மூன்று பெண்களுக்குச் சிறை!!

28 மாசி 2025 வெள்ளி 13:17 | பார்வைகள் : 1232
சுகாதார காப்பீட்டினை முறைகேடாக பயன்படுத்தி, மோசடி செய்த மூன்று பெண்களுக்கு சிறைத்தடணை விதிக்கப்பட்டுள்ளது.
நீஸ் (Nice) மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் மேற்கொண்டிருந்த விசாரணைகளில் இந்த மோசடி தெரியவந்துள்ளது. Roquebrune-Cap-Martin நகரைச் சேர்ந்த மூன்று தாதியர், கடந்த மூன்று ஆண்டுகளாக நோயாளிகளின் காப்புறுதி அட்டைகளை பயன்படுத்தி மோசடி செய்ததாகவும், மொத்தமாக 1 மில்லியன் யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பித்த விசாரணைகளை அடுத்து, மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
மார்ச் 27 ஆம் திகதி அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.