கிரீஸ் டெம்பே ரயில் விபத்து- நினைவு தினத்தில் வெடித்த வன்முறை!

28 மாசி 2025 வெள்ளி 17:11 | பார்வைகள் : 211
கிரீஸில் நடந்த ரயில் விபத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் வன்முறை வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரீஸில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தின்(Tempe Train Crash) இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில், நீதி கேட்டு (Demand for Justice) நாடு முழுவதும் நடந்த போராட்டங்கள் ஏதென்ஸில் வன்முறையாக மாறியது.
ஆக்ரோஷமான போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி வேண்டிய நிலை ஏற்பட்டு பரபரப்பை அதிகரித்துள்ளது.
நாட்டின் மிக மோசமான ரயில் விபத்தை(Train Accident) நினைவுகூரும் இந்த நாள், நாடு தழுவிய வேலை நிறுத்தங்கள் மற்றும் பேரணிகளுக்கு வழிவகுத்ததோடு, இறுதியில் கிரீஸ் நாடாளுமன்றத்திற்கு அருகில் கடுமையான மோதல்களுக்கும் வழிவகுத்தது.
ஏதென்ஸ்(Athens) நகரத்தின் மையப்பகுதியில், முகமூடி அணிந்த ஏராளமானோர் காவல்துறையினருடன் வன்முறையில் ஈடுபட்டனர்.
அவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதோடு, நடைபாதைக் கற்களை உடைத்து எறிந்தனர், மேலும் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைக்க முயன்றனர்.
அதிகரித்த வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறை கண்ணீர் புகை(Tear Gas) மற்றும் அதிர்ச்சி குண்டுகளை வீசியது.
நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக நடந்த ஆர்ப்பாட்டங்கள், 2023 டெம்பே ரயில் விபத்தில் (2023 Tempe Train Crash) உயிரிழந்த 57 உயிர்களை நினைவுகூரும் நோக்கம் கொண்டதாக கூறப்படுகிறது.