Saint-Ouen : Bouygues காட்சியறை கொள்ளை!!

28 மாசி 2025 வெள்ளி 22:34 | பார்வைகள் : 320
Saint-Ouen (Seine-Saint-Denis) நகரில் உள்ள Bouygues காட்சியறை கொள்ளையிடப்பட்டுள்ளது. பாதசாரி ஒருவரின் உதவியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெப்ரவரி 27, நேற்று வியாழக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Avenue Gabriel-Péri வீதியில் அமைந்துள்ள குறித்த காட்சியறையில் இரவு 8 மணி அளவில் கறுப்பு நிற ஆடை, முகமூடி அணிந்த ஒருவர் நுழைந்து அங்கிருந்த ஊழியர் ஒருவரை மிரட்டியுள்ளார். பின்னர் தொலைபேசிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தொலைபேசிகள் சிலவற்றை திருட முற்பட்டுள்ளார்.
அதன் போது மிக தைரியமாக செயற்பட்ட ஊழியர், குறித்த நபரை தள்ளி கீழே விழுத்தியுள்ளார். பின்னர் வீதியில் சென்ற பாதசாரி ஒருவரை உதவிக்கு அழைத்து குறித்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் BAC காவல்துறையினர் அழைக்கப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.