ஐந்து தலைமுறைகளாய் Jean Trogneux வெதுப்பகம்..!
10 ஆவணி 2017 வியாழன் 11:30 | பார்வைகள் : 18675
Jean Trogneux என்பது ஒரு வெதுப்பகம். இனிப்பு பண்டங்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனம். ஐந்து தலைமுறைகளாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த நிறுவனம் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் மாமனாருடைய கடை!
Trogneux எனும் 'குடும்பப்பெய'ரிலேயே இந்த இந்த வெதுப்பகம் இயங்கி வருகிறது. பிரான்ஸ் முழுவதும் ஐந்து கிளைகளை கொண்டுள்ளது. சொக்குலேட் பண்டங்கள் தயாரிப்பது இந்த வெதுப்பகத்தின் பிரதான பணி.
1872 ஆம் ஆண்டு, Jean-Baptiste Trogneux என்பவரால் Amiens இல் முதன்முறையாக இந்த வெதுப்பகம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வெதுப்பகத்தில் macaron d'Amiens எனும் ஒரு பண்டம் மிக பிரபலம். macaron நீங்கள் முன்னரே அறிந்தது தான். ஆனால் இந்த macaron d'Amiens ஒரு வேறு 'லெவல்' சுவை!! Jean-Baptiste Trogneux இன் மகன் கண்டுபிடித்த அந்த macaron, இன்றுவரை பிரதான தயாரிப்பாக உள்ளது.
தற்போது இந்த வெதுப்பகங்களை வேறொருவர் நடத்தி வருகிறார். இவர் Jean-Baptiste Trogneux இன் மருமகன் ஆவார்.
தற்போது இங்கு, 800 வகையான சொந்த தயாரிப்புக்கள் விற்பனையில் இருக்கின்றன. பழக்கூழ் (ஜாம்), வெண்ணை, உள்ளிட்ட பொருட்களோடு.. சுடச்சுட பிரெஞ்சு pâtés உம் கிடைக்கின்றது.
இக்கடையில் மாத்திரம் பிரத்யேகமாக கிடைக்கும் macarons, கடந்த 2015 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு மில்லியன்கள் விற்றுத்தீர்ந்திருக்கின்றன.
சரி, மக்ரோன் கதைக்கு வருவோம். Jean-Alexandre Trogneux இன் ஆறு பிள்ளைகளில் ஆறாவது பிள்ளை தான் நமது முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன்.
அதனால்தான் இது இம்மானுவல் மக்ரோனின் மாமனார் கடை என்று முன்னர் குறிப்பிட்டிருந்தோம்.