Paristamil Navigation Paristamil advert login

Lycée Saint-Louis-de-Gonzague - சில தகவல்கள்!!

Lycée Saint-Louis-de-Gonzague - சில தகவல்கள்!!

9 ஆவணி 2017 புதன் 12:30 | பார்வைகள் : 18566


பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள இந்த உயர்கல்லூரி நீங்கள் அறிந்தது தான். இந்த பாடசாலை பிரெஞ்சு தேசத்துக்கு பல முக்கிய அரசியல் தலைவர்களையும், வியாபார பெருந்தகைகளையும் உருவாக்கி தந்துள்ளது. இப்பாடசாலை குறித்து சில முக்கிய தகவல்களை பார்க்கலாம்! 
 
1894 ஆம் ஆண்டு ரோமன் கத்தோலிக்க பாடசாலையாக Petit Externat du Trocadéro ஆல் செப்டம்பர் 28, 1894 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட சில வருடங்களிலேயே மிகப்பெரும் வெற்றிகரமான பாடசாலையாகவும், தரமான கல்வி கற்பிக்கப்படும் பாடசாலையாகவும் உருமாறியது. 
 
தற்போது இப்பாடசாலை, 3 தொடக்கம் 10 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு école primaire, 10 தொடக்கம் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு collège, 15 தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு lycée, 18 வயதில் இருந்து 20 வயது பிரிவினருக்காக préparatoires போன்ற அனைத்து வயது பிரிவினருக்கு கல்வி வழங்குகிறது. 
 
முன்னதாக, 2012 ஆம் ஆண்டில் 64 வீத மாணவர்கள் இளங்கலை பட்டம் (Mention Très Bien) பெற்று சாதனை படைத்தனர். பின்னர் 2013 ஆம் ஆண்டு மிகப்பெரும் முன்னேற்றமாக, 76 வீத மாணவர்க்ள் Mention Très Bien பெற்றுக்கொண்டனர். இதற்கு எல்லாம் மேலால், கடந்த வருடம் 2016 இல், 92 வீத மாணவர்கள் Mention Très Bien பெற்று, ஆச்சரியப்பட வைத்தனர். அப்போது இந்த பாடசாலை தேசிய அளவில் #1 இடத்தினை பெற்றுக்கொண்டது. 
 
இறுதியாக ஒரு சுவாரஷ்ய தகவல், நாட்டின் முதல் பெண்மணி Brigitte Macron இங்கு தான் ஆசிரியராக பணியாற்றினார். இவரின் மாணவர் தான் தற்போதைய ஜனாதிபதி! தன் கணவருக்கு அரசியல் வாழ்க்கையில் உதவுவதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு தனது ஆசிரியர் சேவையில் இருந்து விலகிக்கொண்டார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்