கடும் மோதலில் முடிவடைந்த டிரம்ப் ஜெலென்ஸ்கி சந்திப்பு

1 பங்குனி 2025 சனி 06:53 | பார்வைகள் : 497
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கியும் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவேளை இருவரும் உக்ரைன் போர் தொடர்பில் இருவரும் கடுமையான வார்த்தை பரிமாற்றங்களில் ஈடுபட்டனர்.
உக்ரைன் போர் தொடர்பில் இருவரும் கடுமையான வார்த்தை பரிமாற்றங்களில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதியை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர் மாநாட்டையும் இரத்து செய்தார்.
ரஸ்யாவுடனான உடன்பாட்டிற்காக உக்ரைன் விட்டுக்கொடுப்புகளிற்கு தயாராகயிருக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்த பின்னரே இருவரும் கடுமையாக உரையாட தொடங்கினார்கள்.
விட்டுக்கொடுப்பின்றி எந்த உடன்பாட்டிற்கும் வரமுடியாது நிச்சயமாக நாங்கள் சில விட்டுக்கொடுப்புகளை செய்யப்போகின்றோம் ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பது போல அது பெரியதல்ல என டிரம்ப் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை சந்திப்பின்போது அமெரிக்கஜனாதிபதி டிரம்பும் துணை ஜனாதிபதி ஜேடிவான்ஸ் ஜெலென்ஸ்கியை கடுமையாக விமர்சித்தார்கள் என தெரிவித்துள்ள சர்வதேச செய்திகள் உக்ரைன் ஜனாதிபதி பிரச்சார பயணங்களில் ஈடுபடுகின்றார் என குறிப்பிட்டனர் என தெரிவித்துள்ளன.