உக்ரைன் ஜனாதிபதியை அவமதித்த அமெரிக்க ஜனாதிபதி

1 பங்குனி 2025 சனி 08:08 | பார்வைகள் : 444
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சென்ற உக்ரைன் ஜனாதிபதியை ட்ரம்ப் அவமதித்த விடயம் ரஷ்யாவுக்கு கொண்டாட்டமாகியுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சென்ற உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் நேற்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், துணை ஜனாதிபதி JD வேன்ஸும் சந்தித்தார்கள்.
உலகமே பார்க்க, ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது ஜெலன்ஸ்கியை அவமதிக்கும் விதத்தில் நடந்துகொண்டார்கள் இருவரும்.
ட்ரம்ப் ஜெலன்ஸ்கியைப் பார்த்து மக்களின் உயிர்களுடன் விளையாடுகிறீர்கள் என கத்த, JD வேன்ஸ் இடைமறித்துப் பேச, உங்கள் ஊரில் போரிட ஆண்களே இல்லை என கூற, இருவருமாக ஒரு நாட்டின் தலைவருடன் பேசுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் மோசமாக நடந்துகொண்டார்கள்.
ஜெலன்ஸ்கி நடத்தப்பட்ட விதம் உலக நாடுகள் பலவற்றிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யா அதை கொண்டாடியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதியின் முதலீடு மற்றும் வெளிநாடுகளுடனான பொருளாதார கூட்டமைப்பின் சிறப்பு தூதரான Kirill A. Dmitriev, ஜெலன்ஸ்கியை அவமதிக்கும் விதத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
சமூக ஊடகமான எக்ஸில் Dmitriev வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் ஜனாதிபதியை மோசமான வார்த்தையால் விமர்சித்துள்ளதுடன், அவருக்கு அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகத்தில் சரியான அறை கிடைத்தது.
ட்ரம்ப் சொல்வது சரிதான், உக்ரைன் தலைமை மூன்றாம் உலகப்போருடன் விளையாடிக்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் Dmitriev.